தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்துக்கு முன்பாக குறித்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் கற்றல் உபகரணங்களுக்கு விதிக்கப்படுகின்ற வரியை முற்றாக நீக்க வேண்டும் எனவும், பல்கலைக்கழகத்தில் புதிய விடுதிகளை நிர்மாணிக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரியுள்ளனர்.