நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் கர்ப்பிணி தாய்மாருக்கு அரச குடும்ப சேவை பெண் ஊழியர் சங்கம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
கர்ப்பவதி தாய்மார்கள் பிரசவ காலத்தில் குறிப்பாக கர்ப்பம் தரித்து 7 மாதங்கள் ஆகும் போது தேவையான உடைகள் உள்ளிட்டவையுடன் மேலதிகமாக ஒரு கொள்கலனில் எரிபொருளையும் சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அரச குடும்ப சேவை பெண் ஊழியர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் எந்தவொரு வாகனத்திலாவது கர்ப்பிணி பெண் வைத்தியசாலைக்கு செல்ல முடியும் என சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், மகப்பேற்று வைத்தியசாலைகளை நாடுவது தாய்க்கும் சேய்க்கும் பாதுகாப்பு என தெரிவித்துள்ளார்.