கரையோர மார்க்கத்திலான சில புகையிரத சேவைகள் இன்றும் நாளையும் ரத்து செய்யப்படும் என புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த புகையிரத மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் அத்தியாவசிய திருத்த பணிகள் காரணமாக குறித்த மார்க்கத்திலான சில புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, மருதானை புகையிரத நிலையத்தில் இருந்து காலி புகையிரத நிலையத்தை நோக்கி மதியம் 12.10க்கு புறப்படும் புகையிரதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், காலி புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி அதிகாலை 4.10க்கு புறப்படும் புகையிரதம், காலி புகையிரத நிலையத்தில் இருந்து காலை 8.50க்கு புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொழும்பு கோட்டையில் இருந்து காலி நோக்கி இரவு 7.30க்கு பயணிக்கும் இரவு நேர அஞ்சல் புகையிரதம் ஹிக்கடுவை புகையிரத நிலையம் வரை மாத்திரம் இயக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.