-மூதூர் நிருபர்-
திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள மலைமுந்தல் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமையொன்று கரையொதுங்கியுள்ளது.
இவ் கடல் ஆமையானது சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்து கரையொதுங்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் கடல் ஆமைகள் உயிரிழந்து கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்குவது வழமையான விடயமெனவும் தெரிவிக்கப்படுகிறது.


