கம்பஹாவில் – அக்கரவிட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் கடை அருகே குறித்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த துப்பாக்கிதாரிகள் இருவரால் குறித்த துப்பாக்கிசூடு நடத்தப்படுள்ளதுடன் காயமடைந்தவர்கள் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சந்தேக நபர்கள் தப்பி ஓடிய நிலையில் அவர்களை கைது செய்வதற்கான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.