கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டம் கடந்த மாதம் 28ஆம் திகதி இடம்பெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் இ. சிறிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நீர்ப்பாசன கட்டமைப்பில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தெளிவுபடுத்தினார்.
மேலும் இது தொடர்பாக சரியான கள மதிப்பீடு செய்து சீரான நீர்ப்பாசன கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் போது மாவட்ட ரீதியில் விவசாயிகள் பொருளாதார ரீதியாக பல நன்மைகளை பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

