அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதிய விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி, மட்டுவில் பகுதியை சேர்ந்த பனுஜன் (வயது – 22) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் சாவகச்சேரி, புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் நாளை செவ்வாய்க்கிழமை கனடாவுக்கு பயணமாகவிருந்த நிலையில் இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்