கத்தாரில் வேலை தருவதாக உறுதியளித்து ஒரு தனிநபரிடமிருந்து 600,000 ரூபா பணத்தை மோசடி செய்த இரண்டு பெண்களை கைது செய்வதற்கான விசாரணைகளை மன்னார் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் வசிக்கும் 31 வயதுக்கு மேற்பட்டவர்கள் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர் பல தடவைகள் சந்தேக நபர்களின் கணக்கில் பணத்தை வைப்பிலிட்டுள்ளதோடு, கடவுச்சீட்டையும் சந்தேகநபர்களிடம் ஒப்படைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களை கைது செய்ய மன்னார் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.