கதிர்காமம் பொது பேருந்து நிலையத்திலுள்ள கழிப்பறைக்கு அருகில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள தண்ணீர் தொட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு வெளி பிரதேசத்தில் இருந்து வந்தவர் என்றும் அவர் பல நாட்களாக கதிர்காம நகரத்தில் சுற்றித் திரிந்ததாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.