கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று நீதிமன்ற வளாகத்தில் பணியிலிருந்த பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 40 பேரிடம் இதுவரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.