துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு கணேமுல்ல சஞ்சீவவை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
கள விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சந்தேகநபர் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை கணேமுல்ல சஞ்சீவ படுகொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைகள் நடத்தப்படும் என்று கொழும்பு குற்றப்பிரிவு இன்று வியாழக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.