சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரின் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில புகைப்படங்கள் உண்மையானவை அல்ல என்றும், அவை ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருத்தப்பட்டுள்ளன என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
வேனில் கைது செய்யப்பட்டபோது சந்தேக நபர் சமூக ஊடகங்களிலும் சில முக்கிய ஊடகங்களிலும் பகிரப்பட்ட சில புகைப்படங்கள், அவர் நிதானமான மனநிலையில் இருந்ததையும், பாதுகாப்புப் பணியாளர்களால் நட்புரீதியான முறையில் நடத்தப்பட்டதையும் காட்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
சில புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திருத்தப்பட்டதாகவும், AI தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் கூறியதாகவும் அமைச்சர் கூறினார்.