கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஹஷிஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டு பெண் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதுடைய கனேடிய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் கனடாவின் ரொறன்ரோவில் இருந்து நேற்று சனிக்கிழமை வந்தடைந்த நிலையில் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்துறைக்கு கிடைத்த சர்வதேச புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் அவர் கொண்டு வந்த இரண்டு பயணப்பொதியில் படுக்கை விரிப்புகளில் மறைத்து வைத்திருந்த நிலையில் 36.5 கிலோகிராம் “ஹாஷிஷ்” மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இந்த போதைப்பொருள் வேறு நாட்டிற்கு மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்கத்தில் இருந்ததாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் உட்பட போதைப்பொருட்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.