கட்டா பாறை மீன்

கட்டா பாறை மீன்

🟡பாறை மீன்கள் பொதுவாக, பாறைகளிலேயே மறைந்து கொள்ளுமாம்.. சிலர் இதனை பரவா மீன் என்பார்கள். பாறை மீன் பார்ப்பதற்கு வெள்ளி நிறத்திலும், துடுப்புகள் மஞ்சள் நிறத்திலும் செவுள் பகுதிகள், கரும்புள்ளிகளுடன் காணப்படும். அதனால்தான், இதை சிலர் பட்டர் ஃபிஷ் என்பார்கள். சிலர் ஒயிட் ஃபிஷ் என்பார்கள். முள் சிறிய அளவுதான் இருக்கும்.

🟡பாறை என்பது பொதுவான பெயராகும். ஆனால்இ இந்த பாறையிலேயே நிறைய வகைகள் உள்ளன. அந்தவகையில் தேங்காய் பாறை மீன், மஞ்ச பாறை மீன், கடல் பாறை மீன், தோள் பாறை மீன், முட்டா பாறை மீன், நெய் பாறை மீன், கட்டா பாறை மீன் இப்படி நிறைய வகைகள் உளளன. இவை அத்திலாந்திக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகியவற்றில் வாழ்கின்றன.  இக் குடும்பத்தைச் சேர்ந்த பல இனங்கள் வேகமாக நீந்தவல்லவை.

🟡சில மீன்களை குழம்பு வைத்தால்தான் நன்றாக இருக்கும்.. சில மீன்களை வறுத்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால், இந்த பாறையை மட்டும் குழம்பு, வறுவல் என இரண்டுமே செய்யலாம், அதனால்தான், தென்மாநிலங்களில் பாறை மீனுக்கென்று ஸ்பெஷல் இடம் உண்டு. இதன் விலையும் மிகவும் குறைவு. தட்டுப்பாடின்றி கிடைக்கக்கூடிய மீனில் இதுவும் ஒன்றாகும்.

பாறை மீன் வகைகளின் ஒன்றான கட்டா பாறை மீன்னின் நன்மைகளைப் பார்ப்போம்,
  • அந்தவகையில் இந்த மீனை சாப்பிடுவதால் தோல் சம்மந்தமான நோய்கள் வருவதைத் தடுக்கும்.
  • முடி உதிர்வதைக் குறைக்கும்.
  • மன அழுத்தம் தொடர்பான பிரச்சனை வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
  • வைட்டமின் D நிறைந்திருப்பதால் புற்றுநோய் செல்களை நெருங்க விடாமல் தடுக்கு திறன் கொண்டது.
  • வைட்டமின் B12 நிறைந்துள்ளதால்இ கொலஸ்ட்ராலின் அளவை சமமாக வைத்திருக்க கட்டா பாறை மீன் உதவி புரிகிறது.
  • நிறைய புரோட்டீன்கள் இந்த கட்டா பாறை மீனில் உள்ளன.. அதனால், இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடையைக் குறைக்க முடியும்.
  • உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
  • மேலும் இந்த மீனை வாரம் 2 நாள் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதைத் தடுக்கும்.
  • மன அழுத்தம் வருவதைக் குறைக்கும்.

🔺கட்டா பாறை மீனை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதே நேரத்தில் இந்த மீன் சாப்பிடுவதால் தீமைகளும் ஏற்படுகிறது.

🔺அதிகளவில் தொடர்ந்து மீன் சாப்பிடுபவர்களுக்கு ஆஸ்துமா முதல்  புற்றுநோய் வரை ஏற்படும் என உலகளவில் நடந்த ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

🔺இந்த மீனுக்கு ஆக்ஸிஜனை உறிஞ்சும் சக்தி இருப்பதால், மீனை அதிகம் உண்பவர்களுக்கு மூளை சம்மந்தமான நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும் கட்டா பாறை மீன்களை அதிகளவில் சாப்பிட்டால் நீரிழவு நோய் ஏற்படும். ஏனெனில் இது உடலில் சர்க்கரையை அதிகமாக்கும்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்