கட்டாகாலி மாடுகள் தொடர்பில் அதன் உரிமையாளர்கள் மீது எதிர்வரும் 23.02.2025 முதல் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மட்டக்களப்பு நகராட்சி மன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகள், கால்நடைகளால் கடந்தகாலங்களில் பல்வேறு விபத்து சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் தற்போது வீதிகளில் தேவையற்ற விதத்தில் சுற்றி திரியும் கட்டாகாலி மாடுகள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மாநகர எல்லைக்குட்பட்ட கால்நடை வளர்ப்போருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் நாளை புதன் கிழமை இடம்பெறவுள்ளது.
மேலும் இவ்வாறு விதிமுறைகளை மீறி வீதிகளில் நடமாடும் கட்டாக்காலி மாடுகள் மாநகரசபையால் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.