ஹிக்கடுவை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 39 வயதுடைய நபரும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணும் 46 வயதுடைய நபருமே காப்பாற்றப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டுப் பிரஜைகள் மூவரும் நேற்றைய தினம் ஹிக்கடுவை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ள நிலையில் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனை அவதானித்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர்கள், மூன்று வெளிநாட்டுப் பிரஜைகளையும் காப்பாற்றி அவர்களுக்கு முதலுதவி அளித்துள்ளனர்.