சிலாபம் பகுதியில் கடலலையில் அள்ளுண்டு செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் கடலில் பெண் ஒருவரும், 8 வயது சிறுவன் ஒருவரும் கடலலையில் அடித்துச் செல்லப்பட்டதை தொடர்ந்து, உள்ளூர்வாசிகளால் அவர்கள் மீட்கப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.