காலி பூஸா கடலில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ரத்கம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பாவர பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவனே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நண்பர்கள் குழுவுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளார்.
உயிர்காப்புக் குழுவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மாணவனைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ரத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.