ஓய்வூதிய வயதில் மாற்றம்

சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயதை அதிகரிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த 1949ஆம் ஆண்டில் 36 ஆண்டுகளாக இருந்த சீனா்களின் சராசரி ஆயுட்காலம் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

கடந்த 75 ஆண்டுகளாக சீனாவில் ஓய்வு பெறுவதற்கான வயதெல்லை ஆண்களுக்கு 60ஆகவும் பெண்களுக்கு 55 – 60 ஆகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் சீனாவில் ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ஓய்வு பெறும் வயது வரம்பை இன்னும் 5 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரிக்கவிருப்பதாகவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஓய்வு பெறுவதற்கான வயது வரம்பை 65ஆக அதிகரிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்