தாய்வானில் 32 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையைப் பெறுவதற்காக, ஒரு நபர் ஒரே பெண்ணை 4 முறை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார்.
தாய்வான் நாட்டு சட்டப்படி, திருமணத்திற்காக 8 நாட்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும்.
இதற்காக வங்கி ஊழியர் ஒருவர், ஒரே பெண்ணை 37 நாட்களில் 4 முறை மீண்டும் மீண்டும் திருமணம் செய்து 32 நாட்கள் விடுமுறையைப் பெற்றுள்ளார்.
ஒவ்வொரு முறையும் விடுமுறை முடியும் போது குறித்த பெண்ணை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் திருமணம் செய்துள்ளார்.
இதை அறிந்த வங்கி, 5வது முறை அவர் சமர்பித்த விடுமுறை கோரிக்கையை நிராகரித்துள்ளது.
அதனால் கோபமடைந்த குறித்த நபர் தான் ஊழியர் சட்டப்படி நடந்து கொண்டதாக கூறி வங்கி நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.