நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் செயலிழந்துள்ள ஜெனரேட்டர்கள் பழுதுபார்க்கப்பட்டு பிரதான மின்கட்டமைப்போடு மீண்டும் இணைக்கப்படும் வரை நாட்டின் பல மாவட்டங்களில் ஒருவாரத்திற்கு குறுகிய மின்வெட்டு விதிக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
நிலக்கரி மின்நிலையத்தை விரைவில் சரிசெய்ய முயற்சிகள் நடந்து வருவதாகவும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மின்வெட்டு தொடர வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் பல மாவட்டங்களில் இன்று ஒரு மணி நேரம் 30 நிமிட மின்வெட்டு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்ட போதும் பழுதுபார்க்கும் செயல்முறை முன்னேறும்போது, இந்த நேரங்கள் குறையும்.