நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி 95 ஒக்டேன் ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, 475 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த 95 ஒக்டேன் லீட்டர் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று திங்கட்கிழமை, சினோபெக் (Sinopec) எரிபொருள் நிறுவனம் ஒக்டென் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவினால் உயர்த்தியுள்ளது.
இதன்படி, சினோபெக் நிறுவனத்தின் ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 495 ரூபாவாக உயர்ந்துள்ளது.










