-மூதூர் நிருபர்-
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 26,29,40 வயதுகளை உடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இவர்களிடமிருந்து 2 கிராம் 400 மில்லி கிராம், 2 கிராம் 250 மில்லி கிராம், 2 கிராம் 200 மில்லி கிராம் நிறையுடைய ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. அத்தோடு ஐந்து கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
