-பதுளை நிருபர்-
பதுளையில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
சுவினிதகம பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது பதுளை நகரில் சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவரை பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியள்ளனர்.
இதன்போது சூட்சுமமான முறையில் சந்தேக நபர் தன் கைவசம் மறைத்து வைத்திருந்த 5400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக பதுளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.