ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான விசேட அறிவிப்பு
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.
பரீட்சைக்குப் பேனா பயன்படுத்தினால் கருப்பு அல்லது நீல நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் வேறு நிறங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்கள் பென்சிலை பயன்படுத்தினால் அதற்குத் தடையில்லை எனவும், பென்சிலால் எழுதும் பிள்ளைகள் சில பென்சில்களை எடுத்து வருமாறும் குறிப்பிட்டுள்ளார்.
பரீட்சை நிலையத்திற்குள் அழிப்பான் மற்றும் தண்ணீர் போத்தல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றது.
மேலும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் கோப்பு அட்டைகளைப் பரீட்சை நிலையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்