ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அனுமதி கட்டணம்

ஏற்றுமதி செய்யப்படும் தேயிலைக்கு அனுமதி கட்டணம் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில், ஒரு கிலோகிராம் தேயிலைக்கு 3 ரூபா என்ற அடிப்படையில் அனுமதி கட்டணம் அறவிடுவதற்கான அதிவிசேட வர்த்தமானி இலங்கை தேயிலை சபையின் தலைவரின் கையொப்பத்துடன் அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

மேலும், இதன்போது அறவிடப்படும் நிதியை இலங்கை தேயிலை மூலதன நிதியத்தில் வரவு வைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்