
ஏறாவூரில் புற்றுநோயாளர்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு
ஸ்கை தமிழின் பணிப்பாளர் ஜே.எம்.பாஸித் வழிகாட்டலில் இதயம் சமூக சேவை திட்டத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.பஹத் ஜுனைட் தலைமையில் ஸ்கை தமிழ் சமூக சேவை குழுவினர் நேற்று சனிக்கிழமை ஏறாவூர் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு கள விஜயம் மேற்கொண்டு, சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களின் நிலைகள் தொடர்பில் கலந்துரையாடியதுடன் அவர்களுக்கான பகல் உணவு மற்றும் அத்தியவசியப் பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பொதியும் வழங்கியதனூடாக இச்சமூகப் பணியானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமூக சேவைகளின் செயற்பாட்டாளர் ஹாஷிம் உமர் பௌண்டேஷனின் தலைவர் புலவலர் ஹாஷிம் உமர் நெறிப்படுத்தலில் கடந்த ரமழான் மாதத்தில் ஹாஷிம் உமர் பௌண்டேஷனினால் முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி திட்டத்தில் ஸ்கை தமிழ் ஊடகமும் தெரிவு செய்யப்பட்டது.
இதன்போது கிடைத்த நிதியுதவியை கொண்டு ஏறாவூர் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு பகல் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பொதியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.