எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பவள விழா நிகழ்வு

 

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பவள விழா நிகழ்வுகள் மாபெரும் வாகன பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.

கண்ணகி மகா வித்தியாலயத்தின் அதிபர் சிவநேசராசா தீபதர்சன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வின் முதல் நிகழ்வாக பழைய மாணவர்களினால் நிர்மானிக்கப்பட்ட பவள விழா நினைவுத் தூபி வித்தியாலயத்தின் பிரதான வாயிலுக்கு அருகாமையில் பாடசாலை 1949 ஆண்டு முதல் முதலாக நிர்மானிக்கப்பட்ட போது முதல் மாணவியாக சேர்த்துக் கொள்ளப்பட்ட பழைய மாணவியினால் திறந்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்ட பழைய மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பங்கேற்புடன் கலை கலாசார பாரம்பரிய அம்சங்களை பறைசாற்றும் வண்ணமாக மாபெரும் வாகன பேரணி களுவாஞ்சிகுடி – கல்முனை பிரதான வீதி வழியாக சென்று மகிளூடை சென்றடைந்து, குறுமண்வெளி வீதி ஊடாக மீண்டும் பாடசாலையை வந்தடைந்ததும், பவள விழா வாகன பேரணி நிறைவிற்கு வந்திருந்தது.

பவள விழா பேரணியில் கலை கலாசார பாரம்பரிய அம்சங்களுடன் வாகன பேரணி மற்றும் மாணவர்களது நடனம், பொம்மலாட்டம், காவடியாட்டம் போன்றவை முன்னெடுக்கப்பட்டதுடன், இப்பேரணியில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நலன் விரும்பிகள் என சுமார் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24