நாளை வெள்ளிக்கிழமை நள்ளிரவு எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி,
92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றருக்கு 74 ரூபாவாலும்
95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றருக்கு 78 ரூபாவாலும்
டீசல் லீற்றருக்கு 56 ரூபாவாலும்
சுப்பர் டீசல் லீற்றருக்கு 65 ரூபாவாலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மண்ணெண்ணெய் 200 ரூபாவாகவும் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.