40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதன் மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், டீசல் தாங்கிய 2ஆம் கப்பல் இன்று மாலை நாட்டை வந்தடையும் என்றும், பெற்றோல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 18-19 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.