மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சாரதிகள் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில்,
நாம் தற்பொழுது எரிபொருல் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றோம். ஆனால் அத்தியாவசிய சேவை என சில துறைகள் உள்ளீர்க்கப்பட்டு எரிபொருள் வழங்குகின்றனர்
ஆனால், எமது தொழிலும் அதியாவசிய சேவையில் ஒரு பகுதியாக விளங்குவததோடு, எமது வாழ்வாதாரம் இதிலேயே காணப்படுகிறது, இது அனைவருக்கும் புரியும்
இதை சம்மந்தப்பட்டவர்களுக்கு கோரிக்கையாக தெரிவிக்கவேண்டும்.
எனவே, வரும் திங்கட் கிழமை காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இருந்து கவனஈர்ப்பு ஊர்வலமும், மகஜர் கையளித்தலும் ஏற்பாடு செய்கிறோம்
தயவுசெய்து சங்கமோ சங்கத்தில் இல்லையே என வேறுபாடு பார்க்காமல் முச்சக்கரவண்டி தொழிலாளியாக ஒன்றுபடுவோம், என தெரிவித்துள்ளனர்.