எரிபொருள் அட்டையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை

-மன்னார் நிருபர்-

மன்னார் நகர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு எரிபொருள் அட்டையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் நாளை ஞாயிற்றுக்கிழமை  காலை முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலகத்தின் கண்காணிப்பில் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

எரிபொருள் அட்டையை பெற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 10-20 மணி வரை சாவற்கட்டு கிராம மக்களும்,12-15 மணி முதல் 3.30 மணி வரை சின்னக்கடை கிராம மக்களும், மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையும், இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை மூர்வீதி கிராம மக்களும் தமது வாகனங்களுக்கு எரிபொருளை  பெற்றுக்கொள்ள முடியும்.

எதிர் வரும் திங்கட்கிழமை  காலை 8 மணி முதல் 10.20 மணி வரையும், மதியம் 12.15 மணி முதல் மாலை 4 மணி வரை எமில் நகர் கிராம மக்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் தெரிவித்தார்.

குறித்த கிராமங்களை தவிர்ந்த ஏனைய கிராம மக்களுக்கு குறித்த தினங்களில் வழங்கப்பட மாட்டாது.

ஏனைய கிராமங்களுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.