எதிர்கால ஜனாதிபதி பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதை வரவேற்கின்றோம்

-அம்பாறை நிருபர்-

எதிர்கால ஜனாதிபதி தேர்தல் என்பது மாபெரும் சக்திகளில் ஒன்று.எனவே இத்தேர்தலில் வட கிழக்கில் பொது வேட்பாளர் நியமிக்கப்படுவதை வரவேற்கின்றோம்.

தமிழ் மக்களுக்கு மட்டும் இவ்வாறான பிரச்சினை இருக்கவில்லை .முஸ்லீம் மக்களுக்கும் இருக்கின்றது.வட கிழக்கில் இரு சமூகத்தினரும் இன்று பாதிக்கப்பட்டு தான் இருக்கின்றார்கள்.எனவே ஒரு அணியில் இருந்து நாங்கள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதை வரவேற்கின்றோம் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் வருத்தம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்

வட கிழக்கு மாகாணத்தை பொறுத்த மட்டில் மூன்று தசாப்த காலமாக தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.தற்போது பொது வேட்பாளர் என கூறுப்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம்.ஏனெனில் எமது மக்களின் வாக்கு பலத்தினால் நாங்கள் பேரம் பேசும் சக்தியாக மாறலாம்.எமது நாடு சுதந்திரம் அடைந்து 72 வருடங்களில் தேசிய கட்சிகளுக்கு ஆதரவு வழங்கி வந்திருந்த போதிலும் அக்கட்சிகள் யாவும் எம்மை நடு வீதியில் விட்டுச்சென்றதே வரலாறு.

குறிப்பாக மாகாண சபை அதிகாரத்தை கூட எம்மால் பெற முடியாத நிலைமை உள்ளது.எனவே எதிர்கால ஜனாதிபதி தேர்தல் என்பது மாபெரும் சக்திகளில் ஒன்று.எனவே இத்தேர்தலில் வட கிழக்கில் பொது வேட்பாளர் நியமிக்கப்படுவதை வரவேற்கின்றோம்.தமிழ் மக்களுக்கு மட்டும் இவ்வாறான பிரச்சினை இருக்கவில்லை .முஸ்லீம் மக்களுக்கும் இருக்கின்றது.

வட கிழக்கில் இரு சமூகத்தினரும் இன்று பாதிக்கப்பட்டு தான் இருக்கின்றார்கள்.எனவே ஒரு அணியில் இருந்து நாங்கள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதை வரவேற்கின்றோம் என்றார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்