நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில் இன்று சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 4 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.04 அமெரிக்க டொலராக டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.58 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.