மொனராகலை – சியம்பலாண்டுவ காவல்பிரிவுற்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 13-ஆம் திகதி சமைத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் எண்ணெய்ச் சட்டியில் தீப்பிடித்ததில் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி, கடந்த 22-ஆம் திகதி இரவு உயிரிழந்ததாக சியம்பலாண்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர், இரண்டு பிள்ளைகளின் தாயான 44 வயதுடையவர்.
சம்பவம் தொடர்பில் சியம்பலாண்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.