எங்களுக்கு கிடைத்த ஆடுகளம் சிறந்ததாக அமையவில்லை – மெத்தியூஸ்

இலங்கை அணி பங்கேற்கும் ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை சனிக்கிழமை அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

குறித்த போட்டிக்காக இலங்கை அணி வீரர்கள் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் தங்களுக்குக் கிடைத்த பயிற்சி வசதிகள் மற்றும் ஆடுகளம் என்பன சிறந்ததாக அமையவில்லை என இலங்கை அணியின் அஞ்செலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

நாளை இடம்பெறவுள்ள போட்டி மற்றும் தற்போதைய நிலைமைகள் குறித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகச் செயற்படுவோம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க