நாடளாவிய ரீதியில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணிமுதல் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் நீக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட திடீர் அசாம்பாவிதம் காரணமாக கடந்த மூன்று நாட்களாக (இடையிடையே தளர்த்தப்பட்டது) அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை நீக்கப்பட்டது.
இன்று மீண்டும் 6 மணிக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.