நெடுந்தீவு பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிர் இழந்துள்ளார்.
நெடுந்தீவைச் சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த நபர் நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.