தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேவலவெவ பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தம்புள்ளை பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.