உலக சந்தைக்கு ஏற்ற வகையில் உலர் மீன் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு உலர் மீன்களை ஏற்றுமதி செய்ய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது .
ஏற்றுமதிக்கான உலர் மீன் உற்பத்தியை ஊக்குவிக்க நவீன தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் நிதி வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்தப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது .