உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று வெள்ளிக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,612.61 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளது.
இது கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் 64.75 டொலர்கள் (-1.38%) வீழ்ச்சியாகும்.
இதேவேளை வெள்ளியின் விலையிலும் இன்று பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 3.33 டொலர்களினால் (-3.93%) குறைந்து, 81.4 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.