உரங்களைப் பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக, சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதுடன் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, அரலகங்வில – கஜுவத்த பகுதி விவசாயிகள் நெல் விதைத்து 45 நாட்கள் கடந்துள்ள போதிலும் உரிய முறையில் உரம் கிடைக்கவில்லை என அப்பகுதி விவசாயிகள் விசனம் தெரிவிப்பதாகவும் தெரிவித்தார்.