-யாழ் நிருபர்-
யாழ்.குருநகர் இறால் வளர்ப்புதிட்டம் பகுதியில் உயிருடன் இருந்த கடல் ஆமை மற்றும் கடலாமை இறைச்சியுடனும் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் .
யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக, யாழ்ப்பாணம் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
குருநகர் பகுதியை சேர்ந்த 57 வயதுடைய சந்தேகநபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 30 கிலோ எடையுடைய உயிர் கடல் ஆமை மற்றும் 20 கிலோ எடையுடைய கடலாமை இறைச்சியுமே மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.