இலங்கையில் 60 % பாடசாலை மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24% மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
“கல்வியில் ஏற்படும் கடுமையான மன அழுத்தம், பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்கள் பயன்பாடு, உடல் ரீதியான அழுத்தம் போன்றவையே இந்த மன அழுத்தத்துக்கு காரணம் என மனநல சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.
இன்று (10) உலக மனநல தினத்தை முன்னிட்டு பேராசிரியர் வெளியிட்டுள்ள கருத்தில் இதனை தெரிவித்துள்ளார்.