நுவரெலியா கிரேன் ஹோட்டல் வீதியில் அமைந்துள்ள உணவு விடுதியில் பயன்படுத்திய பொருட்களை சேமித்து வைத்திருந்த அறையில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில் பெருமளவான சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த அறையில் நேற்று வியாழக்கிழமை மாலை தீப்பரவல் ஏற்பட்ட போது தீயை கட்டுப்படுத்துவதற்கு நுவரெலியா மாநகர சபை தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை சில மணித்தியாலங்களுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது.
குறித்த தீப்பரவல் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் குறித்து அறையில் வைக்கப்பட்டிருந்த சமையல் உபகரணங்கள், இலத்திரனியல் உபகரணங்கள், தளபாடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் நுவரெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.