-அம்பாறை நிருபர்-
அம்பாறை – சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள உணவு தயாரிக்கும் கடைகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
குறித்த பிரதேசத்தில் உள்ள உணவு தயாரிக்கும் கடைகள் தொடர்பில் பொது மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே . மதன் தலைமையில் நேற்று இரவு இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்