இலங்கையின் உணவுச் சட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவிருந்த பல முக்கிய விதிமுறைகளை அமுல்படுத்துவதை ஒத்திவைக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, உணவு ஆலோசனைக் குழுவுடன் (Food Advisory Committee) நடத்திய விரிவான ஆலோசனைகளுக்குப் பின்னரே இந்த முடிவை எடுத்துள்ளார்.
இதன்படி, இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் உணவுகளின் பொதிகளில் இடப்பட வேண்டிய விபரங்கள் மற்றும் விளம்பரங்கள் தொடர்பான விதிகள், திரவ உணவுகளில் சர்க்கரையின் அளவை அடையாளப்படுத்தும் சிவப்பு, மஞ்சள், பச்சை நிற லேபிள்கள் மற்றும் உப்புடன் அயோடின் கலப்பது தொடர்பான தரநிலைகள் ஆகியவை அவற்றில் அடங்கும்