உடற்பயிற்சி நன்மைகள்

உடற்பயிற்சி நன்மைகள்

உடற்பயிற்சி நன்மைகள்

🏃‍♂️உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பல வகையான தேவைகளுக்கு பல வகையான உடற்பயிற்சிகள் உள்ளன. சில உடற்பயிற்சிகள் ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சிகள் நோயைக் குணப்படுத்தவும் உதவும். யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. இப்போது எத்தகைய உடற்பயிற்சிகள் உடலுக்கும், மனதுக்கும் நன்மையைத் தருகின்றன என்பதைப் பார்ப்போம்.

💥தினமும் 30 அல்லது 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதால் உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவும்.

💥தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடு அழகாக இருக்கும்.

💥தினசரி உடற்பயிற்சி செய்தால் மூளையின் இரசாயன அளவு அதிகரிக்கும். இதனால் புதிய விடயங்களைப் படிக்கவும், புரிந்து கொள்வதற்கும் இலகுவாக இருக்கும். மேலும் விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டால் படிப்பு திறன் மற்றும் மனதை ஒருமுகப்படுத்தும் திறன் ஆகியவை அதிகரிக்கும்.

💥உடற்பயிற்சி தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. உடற்பயிற்சி உங்கள் மனதை எளிதாக்கவும் உங்கள் உடலை புத்துணர்ச்சியடையவும் உதவும். உடற்பயிற்சி செய்வது உங்களை நன்றாக உணரவைக்கும். உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.

💥உடற்பயிற்சி செய்வது நீங்கள் நன்றாக தூங்க உதவுகிறது. தூங்குவதில் சிரமம் இருந்தால், உடற்பயிற்சி செய்வதுதான் உங்களுக்கான தீர்வு . உடற்பயிற்சி நீங்கள் நிம்மதியாக உணர உதவுகிறது.

💥இசை உடற்பயிற்சி செயல் திறனை மேம்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்யும் போது இசையை‌ கேட்பது 15%. உடற்பயிற்சி செயல் திறனை மேம்படுத்தும்‌.

💥நாள்பட்ட சோர்வு உள்ளவர்களுக்கு தினசரி உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். நீட்சி மற்றும் ஓய்வெடுத்தல் போன்ற செயலற்ற சிகிச்சைகளை விட உடற்பயிற்சி மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

💥தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால்இ புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறைவடையும்.

💥உடற்பயிற்சி செய்வதால்இ உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறினால்இ விரைவில் உறைந்துஇ மேலும் வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறது. உடல் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால்இ மண் மற்றும் தூசு மூலம் பரவும் நோய்த்தொற்று தடுக்கப்படுகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால்இ புதிய நுண்ணிய ரத்த நாளங்கள் உருவாகும்.

💥கடுமையான உடற்பயிற்சிகள் செய்யும்போது உடற்தசைகள் அதிகச் சூட்டை வெளியேற்றுகின்றன. இந்த வெப்பம் தசைகளில் இருந்து ரத்தம் மூலம் தோலுக்கு மாற்றப்படுகிறது. தோலில் உள்ள வியர்வை வெளியேற்றும் துளைகள் மூலமாக வெப்பம் வெளியேறி, காற்றில் கலக்கிறது. இதனால் பித்தஅளவு சமமாகி, உடல் குளிர்ச்சி அடைகிறது.

உடற்பயிற்சி நன்மைகள்

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்