அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டுள்ளன.
பேருந்துகள் இன்று சனிக்கிழமை வழமை போன்று இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இலங்கை போக்குவரத்து சபை பணியாளர்கள் நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் கடமையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.
தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால், கடமைக்கு செல்லப்போவதில்லை என இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.