-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி மாவட்ட தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் இருந்து எரிபொருளை வழங்குமாறு தெரிவித்து, இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலை முன்பாக தனியார் பேருந்துகளை நிறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை முன்னெடுத்து இருந்தனர்
இந்த நிலையில், 1990 அவசர அம்புலன்ஸ் சேவைக்குரிய எரிபொருளும் குறித்த இலங்கை போக்குவரத்து சபையின் கிளிநொச்சி சாலையில் வழங்கப்பட்டு வந்திருந்த போதும், இன்று அதற்கான எரிபொருளையும் வழங்க விடாது, தனியார் பேருந்து உரிமையாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு கிளிநொச்சி பொலிஸார் விரைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இரண்டு தரப்பினரையும் மாவட்ட செயலகத்திற்கு சென்று கலந்துரையாடி ஒரு தீர்வை பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.